லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரத்தில்
8 – ஆம் பாவாதிபதி இருந்தால்
செயற்கைமரணம். நீர், நெருப்பு கயிறால் பயம், நம்பிக்கை, மோசம், கெட்ட பெயர் எடுத்தல், எதிரிகளால் பயம்,
கடத்தப்படுதல், பலாத்காரம்,அறுவை சிகிச்சை, தொத்து நோயால் தொல்லை, கற்பழிப்பு, ஜெயில் தண்டனை, கீழே
விழுதல், கீர்த்தி பங்கம் முதலியவை உண்டாகும்..
லக்னாதிபதி எதிரிடை நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 9 – ஆம் பாவாதிபதி இருந்தால் பாக்கியம்
இழப்பு, பதவி பறிபோதல், அவமானம் நாஸ்திக தன்மை, கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் தோல்வி,
கெட்ட ஆவிகளால்
தொல்லை, தந்தை , தந்தை வகை விரோதம், ஆபத்து கண்டம், கடல் ஆகாய பயணங்களில் ஆபத்து,
தந்தையின் உடல் நிலை, உயிர் நிலைகளில் பாதிப்பு சொத்து வகையில் தகராறு, பாதிப்பு..
லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 10 – பாவாதிபதி இருந்தால் தன்
பெற்றோர்களுக்கு தன்னை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கரும சடங்குகள் செய்ய முடியாமற் போகுதல்
நிலையான தொழில் இல்லாமை, சமூக பணிகளில் கெட்ட பெயர், ஸ்தல யாத்திரைகளில் பாதிப்பு,
பட்டம் பதவி இழப்பு, மூத்தவர்களுக்கு ஆபத்து, தொழில் பிடிப்பற்ற நிலை..