லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் அல்லது அதன் திரிகோண நட்சத்திரத்தில்
5 – ஆம் பாவாதிபதி இருந்தால்
பூர்வீக சொத்துகளில்வில்லங்கம், வழக்கு வியாஜ்ஜியங்கள், திருமண விஷயத்தில் கோளாறு, புத்திர தோஷம்,
மத்திம வயதில் புத்திர, புத்திரிகளை இழந்து புத்திரசோகம் அடைதல் மனக் கோளாறு காதல் தோல்வி,
லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி இருந்தால் பட்டப்படிப்பு தடைபடுதல், கடுமையான நோய்
தொல்லைகள் வேண்டாத வேலைகளை செய்து மாட்டிக் கொள்ளுதல் அகால போஜனம், திருட்டு, பொருள்களை
பறி கொடுத்தல், திருடர்களால் ஆபத்து, சிறை பயம், கடன் தொல்லையில் சொத்துக்கள் இழப்பு, தாய் வழி மாமன்
விருத்தி இல்லாமல் போகுதல்எதிரிகளால் பயம், மூத்த உடன் பிறப்புக்கு மதிப்பு,ஆயுள் பயம்..
லக்னாதிபதி நின்ற நட்த்திரங்களில் எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரங்களில்
7ஆம்பாவாதிபதி இருந்தால்
களத்திரஹானி, இல்வாழ்வில் குழப்பம் கூட்டு தொழில் பங்கம் பெண்களால் அப கீர்த்தி கணவன்
மனைவியிடையே கருத்து வேற்றுமை, கலப்பு மணம் புரிதல், தாயாரின் சொத்து வகையில் குழப்பம், நீண்ட
ஆயுளுக்கு பங்கம், காம இச்சையால் தவறான வழியில் செல்லுதல் இரகசிய நோய்,
அதில் அவமானம் ஒப்பந்தம் குத்தகையில் பாதிப்பு நஷ்டம்..