பெரும் ஜோதிட மேதைகள்ஆராய்ச்சியாளர்கள்,வானிலைஆய்வாளர்கள்,அனுபவசாலிகள்,
எல்லாம் இந்த கோள்களிடம் என்ன செய்ய இயலும்?.கிழமை-திதி-நட்சத்திரம் இந்த
மூன்றும் நமக்கு சாதாரண விஷயம்.இதில் எவ்வளவு நட்பங்களை அடக்கி உள்ளார்கள்.
எவ்வளவு செயல்பாடுகள் இத்தோடு யோகம்-கரணம் இந்த ஐந்தும் பஞ்ச பூதங்களாக
நின்று நம்மை கோள்களின் வழியாக எப்படிஆட்டிப்படைக்கிறது
என்பதை காணும்போது இதற்கு என்ன பெயர் சொல்வது. இது கோலாட்டம் தானே, ஒரு
ஜாதகத்தில் கோணாதிபதி, கேந்திராதிபதி,உச்சம், ஆட்சி, நட்பு, பல யோகங்கள், சப்தவர்கம்,
அட்டவர்கம், தசவர்கம் இதில் எல்லாம் நுழைந்து பார்த்து இன்னும் என்னென்னவழிகள்
எல்லாம் உள்ளதோ அதில் எல்லாம் நுழைந்து வெளியே பந்து ஒரு பல நிர்ணயம் செய்யும்
போது ‘‘ ரிசல்ட் ’’..
ஜாதகத்தில் சொல்லப்பட்ட வர்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்ணியனாம் என்ற
நிலைப்படி ஜாதகனின் குலசம்பத்து வர்கங்களின்தன்மையையும், அவன் செய்த பாவ
புண்ணியங்களுக்கு தக்கப்படிதான் கோள்களின் கோலாட்டம் என்பதை நாம் முதலில்
அறிந்து கொள்ள வேண்டியதாகும். ஜாதகத்தில் சொல்லப்பட்ட எந்த
யோகமானாலும்அவன் செய்த பாவ புண்ணியத்திற்கு தக்கப்படிதான் செயல்படும் என்பது
உறுதியான ஒன்றாகும்..
இப்பூர்வ பாவபுண்ணிய பலத்தை நாம் நட்சத்திரங்களின் அமைப்பை பொறுத்தே தான்
தெரிந்து கொள்ளமுடியும் என்பது தெளிவு,