இனி சில அடிப்படை விஷயங்களை காண்போம்: கிழமைகள் – பிருதிவி நட்சத்திரங்கள் – தேயு இந்த அடிப்படையை முதலில் சிந்திப்போம் ஞாயிறு – பிருதிவியில் தேயு திங்கள் – பிருதிவியில் அப்பு செவ்வாய் – பிருதிவியில் தேயு புதன் – பிருதிவியில் வாயு குரு – பிருதிவியில் பிருதிவி சுக்கிரன் – பிருதிவியில் அப்பு சனி – பிருதிவியில் ஆகாயம் இதில் பிருதிவியில் பிருதிவி, பிருதிவியில்-அப்பு மிக நல்லது. மற்ற பிருதிவியில் தேயு, ஆகாயம் ஆன்மிக சாதனைக்கு மிக நல்லது. பிருதிவியில் வாயு-நாம் எதற்கு வேண்டுமானாலும் உபயோகபடுத்தி சித்தி அடையலாம். லௌகீகம்-ஆன்மிகம் இரண்டிற்கும் உபயோகப்படுத்தலாம். இந்த வாரத்தில் இன்னும் அதி சூட்சும நிலைகள் உள்ளது. அது காலம் அனுமதிக்கும் போது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முகூர்த்த லக்னம் கணிக்க இந்த விபரம் போதுமானது. அடுத்தது நட்சத்திரம்-நட்சத்திரங்கள் அனைத்தும் தேயு என்று முன்பே கண்டோம். அதன் பகுப்புகளை இப்போது காண்போம். அஸ்வினி -தேயு-ஆகாயம் மகம்-தேயு-ஆகாயம் மூலம்-தேயு-ஆகாயம் பரணி -தேயு-அப்பு பூரம்-தேயு-அப்பு பூராடம் -தேயு-அப்பு கார்த்திகை -தேயு-தேயு உத்திரம்-தேயு-தேயு உத்திராடம் -தேயு-தேயு ரோகிணி -தேயு-அப்பு அஸ்தம் -தேயு-அப்பு திருவோணம் -தேயு-அப்பு மிருகசீரிஷம்-தேயு-தேயு சித்திரை-தேயு-தேயு அவிட்டம் -தேயு-தேயு திருவாதிரை -தேயு-ஆகாயம் சுவாதி-தேயு-ஆகாயம் சதயம்-தேயு-ஆகாயம் புனர்பூசம்-தேயு-பிருதிவி விசாகம்-தேயு-பிருதிவி பூரோட்டாதி -தேயு-பிருதிவி பூசம்-தேயு-ஆகாயம் அனுஷம்-தேயு-ஆகாயம் உத்திரட்டாதி -தேயு-ஆகாயம் ஆயில்யம்-தேயு-வாயு கேட்டை -தேயு-வாயு ரேவதி-தேயு-வாயு நட்சத்திரங்களின் தன்மையை இந்த விதத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அடுத்து முகூர்த்தம் தேவைப்படும் நபரின் பிறந்த கிழமை, நட்சத்திரம் போன்றவற்றை அறிந்து கொண்டு அவர் எந்த கூறின் தன்மையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின் எந்த காரியத்திற்கு முகூர்த்தம் என்பதை அறிந்து அதன்படி நட்சத்திரத்தை அமைத்து லக்னம் குறிக்க வேண்டும். இந்த முறையில் 1|2, 3|4, 1|4 போன்ற நட்சத்திர பகுப்பு இல்லை. அது போல் இராசிக்கும் அதிக முக்கியத்துவம் இல்லை. லக்னம் குறிப்பிடும் போது இராசியின் பெயரை குறிப்பிடாமல் நட்சத்திரத்தின் பெயரைக் கொண்டே குறிப்பிடப்படுகிறது. இந்த முறையில் உள்ள மிக முக்கியமான விதி நாம் அமைக்கும் லக்னத்தின் அதிபதி. லக்னம் அமைந்துள்ள நட்சத்திர கூறுக்கு ஒத்த இசைவில் அமைய வேண்டும். அப்படி அமையாவிட்டால் எத்தனை யோகங்கள் அந்த முகூர்த்த வேளையில் அமைந்திருந்தாலும் அந்த யோகங்கள் வேலை செய்யாது. உதாரணமாக: திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரத்தில் லக்னம் அமையும் நேரத்தில் முகூர்த்தம் வைக்கும் போது கேது பகவான் அஸ்தம், பூரம், பூராடம், திருவோணம், ரோகிணி, மகம், மூலம், அஸ்வினி போன்றவற்றில் அமைதல் வேண்டும். அப்படி அமையும் போது மட்டுமே முழு பலனை அடைய முடியும். இதில் கிரகங்களின் தன்மைகளையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதன் தன்மைகள் கிழமையை ஒட்டியே வரும். ராகு, கேதுக்கள் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதனுடன் சுய தன்மையான ஆகாய நிலையை வெளிப்படுத்தும்- மற்ற கிரகங்கள் கிழமைகளின் தன்மையே பிரதிபலிக்கும். இந்த முறையை கையாளும் போது எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டிய மற்றொரு விதி நிலம்-நீரில் ஒடுங்கும், நிலம்-நீர்,நெருப்பில் ஒடுங்கும், நிலம்-நீர், நெருப்பு,காற்றில் ஒடுங்கும், நிலம்-நீர்,நெருப்பு,காற்று,ஆகாயத்தில் ஒடுங்கும். அடுத்தது, கிழமை பிருதிவி, திதி அப்பு நட்சத்திரம் தேயு யோகம் வாயு கரணம் ஆகாயம். இந்த கட்டுரையில் பஞ்ச அங்கங்களில் இரண்டை மட்டுமே சொன்னேன். மற்ற மூன்றை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். பஞ்ச அங்கங்களை கொண்டு உகந்த நேரம் எடுக்கும் முறையை உங்களுடன் வரும் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த முறையானது ஜோதிட சாஸ்திரத்திற்கு புறம்பானதோ புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட முறையோ அல்ல. காலம் காலமாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்த முறைதான் என்பதையும் கூறி இதன் தொடர்ச்சியில் சந்திப்போம் என்று கூறி விடை பெறுகிறேன். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaJanuary 20, 2021Leave a commentTags: aathmaaஅப்புஆகாயம்தேயுபிருதிவிமுகூர்த்தம்வாயு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:நட்சத்திரத்தின் சிறப்பு 1NextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.5 லக்ன நிர்ணயம்Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18March 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17February 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16February 19, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15February 18, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14February 17, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13February 16, 2025