ஆதிக்கம் செலுத்தும் கிரகம் ஜாதகரின் பிறந்த கிழமை நாதன் சந்திரன். ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன் சந்திரன். ஜாதகரின் பிறந்த ராசி நாதன் சுக்கிரன். ஜாதகரின் லக்கின நாதன் சுக்கிரன். ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திர நாதன். குரு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைத்து வரும். ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல, தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி பெற்றவர்களே.. உதாரணமாக எடுத்துக்கொண்ட ஜாதகருக்கு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்களும் இவர்களோடு சேர்ந்த ராகு, கேதுக்களும் சேர்ந்து நல்ல தீய பலன்களைத் தர தக்கவர்களாக சந்திரன், சுக்கிரன், குரு, ராகு, கேது போன்றவர்கள் வருகிறார்கள். இவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைக்கும்.. உதாரணமாக எடுத்துக் கொண்ட ஜாதகருக்கு பலன் தர அதிகாரம் பெற்றவர்களாக வரும் கிரகங்கள் சந்திரன், சுக்கிரன், குரு, ராகு, கேதுவும் இவர்களுடைய நட்சத்திரங்களும் ஆகும். இவருக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம், பரணி, பூரம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அசுவனி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் கோச்சாரத்தில்.. லக்கினாதிபதி வரும்போது சாதனைகளை செய்வது மகிழ்ச்சி பாராட்டு, பிறர் பணம் கிடைப்பது நெடும் பயணம் ஏற்படுவது பிரசங்கம் மேடை பேச்சு போன்றவைகளும், 2 – ஆம் பாவாதிபதி வரும்போது வருமானம் வருமானத்திற்காக வாய்ப்பு, குடும்ப காரியங்கள் கடன் தீர்தல் அல்லது குறைத்தலும் நாவன்மை சொல்லாற்றலும்.. 3 – ஆம் பாவாதிபதி வரும்போது அன்னியர்கள், தொடர்பு, சகாயம், குறுகிய பயணம், காரிய வெற்றி யோக பாக்கியம் உடன்பிறப்பு வகை காரியங்களும்.. 4 – ஆம் பாவாதிபதி வரும்போது தன் சுகம் அதிகரித்தலும் நிலம், வீடு, வாகன சேர்க்கை அவ்வகை காரியங்களும் தாய் வகை பிரச்னைகளையும் தரும் மற்றும் நான்காம் பாவ விசயங்கள்.. 5 – ஆம் பாவதிபதி வரும் போது தெய்வீக உபசானா வகையில் சிறப்பு புகழ், பதவி, கீர்த்தி, புத்திர உற்பத்தி அவ்வகை சிந்தனை அவர்களுக்கு நற்காரியங்களை செய்வது மற்றும் ஐந்தாம் பாவ விசயங்கள்.. 6 – ஆம் பாவாதிபதி வரும்போது கடன் கிடைத்தல், உடல்உபாதை, தந்தைக்கு ஆயுள் பயம் தொழில் வாய்ப்பு திருட்டுத்தனமான காரியங்களை செய்தல், செய்யத்தூண்டுதல், பொருள்களை விற்று செலவுகளை சமாளித்தல் எதிர்பாராத தனம் கிடைத்தல் மற்றும் ஆறாம் பாவ விசயங்கள்.. 7 – ஆம் பாவாதிபதி வரும்போது அப்பாவ விசயங்களும் இதே போல் 8, 9, 10, 11, 12 – ஆம்பாவதிபதிகள் வரும்போது அப்பாவ பலன்களையும் பெறுவார்.. மேலே சொல்லும் நட்சத்திரங்களில் வரும் கிரகங்களில் வரும் கிரகங்களின் தன்மைகேற்ப பலன்கள் கிட்டும். சந்திரன் மேற்படி நட்சத்திரங்களில் வரும் நாளிலும் பலன்கள் நடைமுறையில் வரும்.. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaApril 28, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகுருகேதுசந்திரன்சுக்கிரன்தீயநல்லபலன்கள்ராகு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 26NextNext post:ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..3Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18March 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17February 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16February 19, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15February 18, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14February 17, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13February 16, 2025