ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..1 ஒருவரின் பிறந்த கிழமைக்குரியவர், நட்சத்திரத்திற்குரியவர், ராசிக்குரியவர், லக்கினத்திற்கு உரியவர், லக்கினம் நின்ற நட்சத்திரத்திற்குஉரியவர்களாக எந்த கிரகங்கள் வருகிறதோ அந்த கிரகத்தின் நட்சத்திரத்திலோ, ராசியிலோ, அந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் உள்ள ராசியிலோ, அந்த கிரகம் உள்ள ராசியிலோ அல்லது அக்கிரகம் பார்த்த ராசிகளிலோ எந்த பாவாதிபதி உள்ளாரோ அப்பாவாதிபதிகளின் இயக்கமே ஜாதகருக்கு மேலோங்கி இருக்கும்.. உதாரணமாக ஒருவர் பிறந்த கிழமை, திங்கள், நட்சத்திரம், ரோகிணி, ராசி, ரிசபம், லக்கினம் துலாம் நின்ற நட்சத்திரம் விசாகம் என்றால் சந்திரன், சுக்கிரன், குரு, போன்ற கிரகங்களின் ஆதிகத்திற்கு உட்பட்டு இவர் பிறந்து உள்ளார். இவர் 10 – க்குரியவர் சந்திரனாகி 2 – இல் உள்ள சுக்கிரன் கேதுவைப் பார்ப்பதால் இவர் நாவன்மை சொல்லாற்றல் கல்வி என்ற வழியிலேதான் தனது உயர்வுகளை பெற முடியும் என்பதாகிறது.. ஜாதகத்தை ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களாக உள்ளவைகளின் காரகத்திற்கு தக்கவாறு தனது ஆதிபத்தியத்தின் மூலம் ஜாதகருக்கு தனது பலன்களை தரும் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களில் பலமான கிரகம் எதுவோ அது முதலிடம் வகிக்கும். வக்கிரம் அஸ்தானம் பெற்ற கிரகங்களை முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பது சரியாகி வராது.. ஜாதகரை ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் ஐந்தில மூன்று கிரகங்கள் பலம் குறைந்ததாகவோ நீச்ச அஸ்தமனம் வக்கிரம் பெற்றதாக இருந்து விட்டால் ஜாதகரின் உயர்வு பற்றி சிந்திக்க வழியில்லை. அவ்வகை ஜாதகம் எந்த அளவில் யோக அமைப்பு பொருந்தியதாக இருப்பினும் அந்த யோகத்திற்கு எதிராகவே ஜாதகரின் வாழ்க்கை நிலை அமையும்.. பிறப்பு காலத்தில்ஆதிக்கம் செலத்தும் கிரகங்களின் நட்சத்திரம் ராசிகளில் கோச்சாரத்தில் எந்த பாவாதிபதிகள் வருகிறார்களோ அப்பாவ பலன்கள் உறுதியாக அந்த காலங்களில் நடக்கும்.. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaMarch 31, 2021Leave a commentTags: கிழமைகுருசந்திரன்சுக்கிரன்திங்கள்நட்சத்திரம்ராசிரிசபம்ரோகிணி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:நிலத்தின் உயிர் எது? 1NextNext post:பொருளாதார வளர்ச்சிRelated Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18March 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17February 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16February 19, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15February 18, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14February 17, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13February 16, 2025