உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு.
ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்துவருந்தாதே.
எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.
உன்னுடைய ஒவ்வொரு சொல்லும்,
சிந்தனையும்,
செயலும்,
அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை
எப்போதும் நீ நினைவில்வைக்க வேண்டும்.
உனது தீய எண்ணங்களும், செயல்களும்
புலிகளைப் போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன.
அதைப் போலவே உனது நல்லஎண்ணங்களும், செயல்களும்,
ஒரு நுாறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன்
உன்னைஎப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன .
இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.