தூமனுடைய துவாதச பாவ பலன். 1. ஜென்ம லக்கினத்தில் தூமனிருந்தால் ஜாதகன் வெகு ரோஷமுடையவன், சூரன், அழகான கண்ணுடையவன்,தடையில்லாதவன், தயையில்லாதவன், சர்வ முடையவன், ரோகமுடையவன், தனமுடையவன், ராஜ்ஜியத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன் ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் அறிவாளி செளரியமுடையவன் இஷ்டமாய்ப் பேசுபவன் ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் தனத்தைச் சம்பாதிப்பவன், தனவான், மனைவி முதலியவர்களை இழந்து மனசில் எப்போதும் துக்கமுடையவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் சர்வ சாஸ்திராத்தங்களையும் சிந்திப்பவன். 5. ஜென்ம லக்கினத்திற்கு ஐந்தாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் சொற்ப புத்திரருடையவன், பணக்குறைவுடையவன், குருத்துவமடையவன் மந்திரமறியாதவன். 6. ஜென்ம லக்கினத்திற்கு ஆறாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் பலிஷ்டன், சத்துருவைக் கொல்லுபவன், வெகு தேஜசுடையவன், கியாதியுடையவன், எப்போதும் ரோகமில்லாதவன். Category: ஜோதிடம்By admin@powerathmaApril 3, 2021Leave a commentTags: அறிவாளிஜாதகன்தனவான்தூமன்மனைவி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 10NextNext post:கவனித்து கேட்டல்Related Postsசுக்கிரன் 8February 28, 2025சுக்கிரன் 7February 27, 2025சுக்கிரன் 6February 26, 2025சுக்கிரன் 5January 31, 2025சுக்கிரன் 4January 30, 2025சுக்கிரன் 3January 29, 2025