ஜாதகன் எந்த திரேக்காணத்தில் பிறந்தானோ, அந்த திரேக்காணத்திற்கு சொல்லிய சுபாவம், குணம் உள்ளவனாக இருப்பான். அதில் சொல்லப்பட்ட வஸ்துக்கள் மூலம் லாபமோ நஷ்டமோ கஷ்டமோ அடைவான். திருடர்களையும் அறியலாம். குரு – செவ், முதல் திரேக்காணத்தில் இருப்பது நலம். சனி – புதன் 2 – வது, திரேக்காணத்தில் இருப்பது நலம். சுக் – சந் – 3 -வது திரேக்காணத்தில் இருப்பது நலம். லக்னாதிபதி திரேக்காணராசியில் உச்சம் பெறுவது மிக்க நலம். எந்த திரேக்காணத்தில் பாவக்கிரகங்கள் உள்ளதோ அந்த பாவத்தில் குறிப்பிட்ட அங்கங்களில் அடையாளங்கள் ஏற்படும். சர லக்கினத்தில் ( மேசம், கடகம், துலாம், மகரம் ) பிறந்தவர்களுக்கு முதல் திரேக்காணத்தில் உள்ள கிரகத்தின் தசை சிறந்த பலனைத் தரும். உபயலக்கினத்தில் ( மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ) பிறந்தவர்களுக்கு கடைசி திரேக்காணத்தில் உள்ள கிரகத்தின் தசை சிறந்த பலனைத் தரும் ஸ்திர லக்கினத்தில் ( ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ) பிறந்தவர்களுக்கு மத்திம திரேக்காணத்தில் உள்ள கிரகத்தின் தசை சிறந்த பலனைத் தரும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaDecember 21, 2020Leave a commentTags: திரேக்காண பலன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சிந்திக்க செயல்படுத்தNextNext post:திரேக்காண பலன். சந்திரன் கோள்களின் கோலாட்டம் -1.14Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026