கலாம் வாழ்க்கையை நேசித்தவர், வாழ்ந்து காட்டியவர், மனிதனுக்கு இருக்க வேண்டிய சிறப்பான குணங்கள் அன்பு, பண்பு, பொறுமை, நிதானம், வைராக்கியம், தனக்கும் தன் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமை போன்றவை வேண்டுமென்று பெரியவர்கள் சொன்னதை செயல்வடிவத்தில் செய்து காட்டியவர். அது கலாமின் கடைசிபயணத்தில் நடந்த சம்பவத்தில் கூட நாம் காண முடியும். அந்த நேரத்திலும் அவர் ஆசானக இருந்து நமக்கு போதித்திருக்கிறார். புண்ணியம் செய்திருப்பவர்கள் அந்த போதனையை ஏற்று தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள். அதனால் அவர்கள் சந்தோஷத்தையும், நிம்மதியையும், திருப்தியையும் பெறுவார்கள். நன்றி சொல்லுதல் என்பது எப்பேர்பட்ட விஷயம் அது அனுபவித்தால்தான் தெரியும். நன்றி சொல்லும்போது நமக்குள் திருப்தி நன்றிக்கு உரியவரிடம் நம்மேல் அன்பு. நமக்கு வேண்டி அல்லது நாம் செய்ய வேண்டிய பணியை அடுத்தவர் செய்யும் போது அவர்களிடம் நமக்கு வாஞ்சையும் அவர்கள் செய்ததற்கு வேண்டி நன்றியையும் நாம் தெரிவிக்க வேண்டும். அந்த குணம் நம்மை திருப்தியுடையவனாக ஆக்கும். நாம் கடன்காரன் இல்லை என்கின்ற மனோ நிம்மதியைத் தரும். நாம் நன்றி சொல்ல வேண்டியது என்று எண்ணத்தொடங்கினால், தாய், தந்தை, சகோதரர், சகோதரி, நண்பர்கள், ஆசான், பூமி, நீர், , நெருப்பு, காற்று, ஆகாயம் என்று நன்றி சொல்வதற்கு எத்தனையோ உண்டு. உண்மையில் மனதார நாம் இவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோமோ என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் கலாம் அவர்கள் அவருடைய கடைசி நேரங்கள் என்று நாம் அறிந்த அந்த நேரத்திலும் அதை செயல்படுத்தி தன்னில் தான் எப்போதும் தங்கமாகவே இருந்திருப்பதை நாம் அறியும் வண்ணம் செய்து காட்டியிருக்கிறார்.. உழைப்பின் மேன்மைக்கு எப்போதும் உன்னத கூலி உண்டு என்கின்ற வார்த்தைக்கு அவரே உதாரணம். கோடியில் பிறந்து, கோடிக்கணக்கான மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அவர் அமர்ந்த அந்த நிலைக்கு அவருடைய உழைப்பும், உண்மையும் எல்லோரையும் நேசிக்கும் மனமும் தீர்மானமாக இலக்கும் அதை அடைவதற்கு வைராக்கியம் கொண்ட மனமும் அவருக்கு கைவரப்பெற்றதே காரணம். Category: பல்சுவை கதம்பம்By admin@powerathmaSeptember 22, 20202 CommentsTags: divine power athmaகலாம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:வாழ்க்கைங்கிறதுNextNext post:ஒரு கதைRelated Postsஉலக பூமி நாள் 3April 18, 2025உலக பூமி நாள் 2April 17, 2025உலக பூமி நாள் ” 1April 16, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 8March 19, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 7March 18, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 6March 17, 2025
இறுதி வரையிலும் இயற்கையையும் தாய் மண்ணையும் மக்களையும் நேசித்து இளைஞனாகவே வாழ்ந்து சாதனை பல புரிந்து என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் திரு.கலாம் அய்யா. அடுத்த தலைமுறைக்கு அவசியம் இவரை நாம் ஒவ்வொருவரும் சொல்லியாக வேண்டும். Reply
திரு.அப்துல் கலாம் ஐயா அவர்களின் அக்னிச் சிறகுகள் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்து உணர வேண்டிய ஒரு பொக்கிஷம் Reply
இறுதி வரையிலும் இயற்கையையும்
தாய் மண்ணையும்
மக்களையும்
நேசித்து
இளைஞனாகவே வாழ்ந்து சாதனை பல புரிந்து என்றும்
மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்
திரு.கலாம் அய்யா.
அடுத்த தலைமுறைக்கு அவசியம் இவரை நாம்
ஒவ்வொருவரும் சொல்லியாக
வேண்டும்.
திரு.அப்துல் கலாம் ஐயா அவர்களின் அக்னிச் சிறகுகள் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்து உணர வேண்டிய ஒரு பொக்கிஷம்