1. குரு பலம் பெண் – ஆணுக்கு பருவமடையும் முன் செய்யும் திருமணத்திற்குதான் முக்கியமாகும். தந்தை உடனடியாக முயற்சி செய்யாவிடில், பருவமடைந்த பின்னர் பெண் தானாகவே கணவனை தேந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மனுநீதி. ஆகவே பெண் பருவமடைந்த பிறகு நடக்கும் திருமணங்களில் குருபலம் அவசியமில்லை. குருபலம் இருந்தால் அதிக நன்மையாகும். 2. அதாவது, ஜன்ம நக்ஷ்த்திரத்திலிலிருந்து 2, 4, , 8, 9 வது நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் போது நன்மை தரும். உதாரணமாக அசுவனி நட்சத்திரக்காரருக்கு, பரணியில் குரு இருந்தால் இரண்டாம் நட்சத்திரமாகும். இது ஜன்ம ராசி என்றாலும் நன்மை தரும். அதே சமயம் கார்த்திகை 2, 3, 4 ம் பாதத்தில் சஞ்சரிக்கும் போது 2ம் ராசி என்றாலும், 3 வது நட்சத்திரமாவதால் நன்மை குறையும். எனவே ஜன்ம நட்சத்திரத்திற்கு 2, 4, 6, 8, 9 வது நட்சத்திரங்களில் ஜன்ம அனு ஜன்ம, த்ரிஜன்மங்களின் மூன்று பரியாயங்களிலும் குரு சஞ்சரிக்கும் போது அது 1, 2, 4, 6, 8, 10, 12 ராசிகளானாலும் குரு பலன் இருப்பதாகவே பொருள். இது சூக்ஷ்ம குரு பலனாகும். மேலும் திருமண காலத்தை குறித்து சொல்லுமிடங்களில் சுக்கிரனுக்கு த்ரிகோணங்கள், லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களிலும் குரு சஞ்சரிக்கும் காலம் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. எனவே இக் காலங்கள் பொதுவான குரு பலம் இல்லாவிட்டாலும் திருமணத்திற்கு ஏற்றதேயாகும். சப்தம ( களத்ர ) ஸ்தானத்திலிருந்து குரு 2, 5, 7, 9, 11 ல் சஞ்சரிக்கும் போது திருமணம் நடைபெறும். ஏழாமிடத்தை பார்க்கும் கிரகங்கள், அங்கே உள்ள கிரகங்கள், ஏழாமதிபதியுடன் சேர்ந்து இருக்கும் கிரகங்கள் இவற்றின் தசை புத்திகள் விவாகம் தரும். சுக்ரன் அல்லது சப்தமாதிபதி இருவரில் ஒருவர் லக்னாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டையோ, அதற்கு 5மிடம், 9மிடத்தையோ ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ கோசாரத்தில் கடக்கும் காலம் திருமணம் நடக்கும் காலம் 7மதிபதியின் தசா – புத்தி காலங்களில் அல்லது இவருடன் சேர்ந்த அல்லது பார்வை பெற்ற கிரகங்களின் தசாபுத்தியும் விவாகம் தரும். 7மதிபதி நிற்கும் ராசியை ராசி அல்லது நவாம்சத்தில் குரு கோசார ரீதியாக நடக்கும் காலம் திருமணம் நடக்கும், இவையும் குரு பலம் உள்ள காலங்களே. எனவே மேற்கண்ட விபரங்களை நன்றாக கவனித்து திருமணம் நடக்குமா என்ற விபரங்களை அறிய வேண்டும். குரு பலம் என்று சந்திரனிலிருந்த குரு கோசாரத்தில் சஞ்சரிக்கும் நிலையை மட்டும் மனதில் கொண்டு பெற்றோரை தவறான வழியில் இப்போது திருமணம் நடக்காது என்று திசை திருப்பிவிடக்கூடாது. முன் காலங்களில் திருமணம் பருவம் அடையும் முன்னர் நிகழ்ந்தது. எனவே, பாலுணர்வின் வக்ரங்கள் மிக அரிதாகவே ஏற்பட்டன. இன்று சுமார் 40 வயது வரை கூட திருமணம் நடைபெறாத நிலையில் பாலுணர்வை அடக்க இயலாத ஆண், பெண்கள் நிலைகுலைந்து தவறான வழிகளில் சென்று துன்பம் அடைகின்றனர். இதனால் அலித்தன்மை, நபும்ஸக, தன்மைகள் ஏற்படுகின்றன. இவைகள் தம்பதியரின் மன ஒற்றுமை மூலம் சகிப்பு தன்மையாலும், கடவுள் பக்தியுடன் கூடிய நன்னெறியாலும் கட்டுப்படுத்தப்பட்டு நடத்தை தவறாமல் இருக்க வேண்டும். ஆனால் சினிமா, டெலிவிஷன், பக்தி குறைவு, மேனாட்டு நாகரீகம், பெற்றோரிடம் மரியாதை இன்மை, ஒழுக்க கட்டுப்பாடின்மை இவற்றால் அதிகமாகி இல்வாழ்க்கை அமைதியற்றதாகி விடுகிறது. எனவே கிரக நிலைகளை அறிந்து திருமணத்தை காலத்தில் செய்துகொண்டால் ஒரளவு இத் துன்பங்களை குறைக்கலாம். பிரிவு, குழந்தையின்மை மற்ற துன்பங்களும் குறைந்து சிறப்பான இல்வாழ்க்கை அமைய வாய்ப்பாகும் Category: ஜோதிடம்By admin@powerathmaJanuary 4, 2021Leave a commentTags: ஏழாமதிபதிசப்தமசப்தமாதிபதிசூக்ஷ்ம குருராசிலக்னாதிபதி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:உரையாடலின் ஒரு பகுதி 2NextNext post:பிடித்து……Related Postsசுக்கிரன் 8February 28, 2025சுக்கிரன் 7February 27, 2025சுக்கிரன் 6February 26, 2025சுக்கிரன் 5January 31, 2025சுக்கிரன் 4January 30, 2025சுக்கிரன் 3January 29, 2025