1 1வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய
நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
12 துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.
13 ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும்
பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
14 சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன்,
அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம்,
சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும்.
இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற
பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும்
நீக்கித் தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
15. தரும தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானதுது தீவினையாகிய வேரைக்களைந்து
தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.