திரிம்சாம்சம் என்பது ராசியின் 30 பாகைகளைச் சூரியன், சந்திரன் தவிர்த்த
ஏனைய ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள்.
ஒற்றை ராசியின் முதல் 5 பாகைகளைச் செவ்வாய்க்கும்,
அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும்,
அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும்,
அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும்,
எஞ்சியுள்ள 5 பாகைகளைச் சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள்.
இரட்டை இராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.
அதாவது முதல் 5 பாகைகளைச் சுக்கிரனுக்கும்,
அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும்,
அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும் ,
அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும்,
எஞ்சியுள்ள 5 பாகைகளைச் செவ்வாய்க்கும்
பிரித்துக் கொடுத்துள்ளார்கள்.
இப்படி அமைக்கப்படும் சக்கரத்திற்கு
திரிம்சாம்சம் என்று பெயர்