தியானம்
ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக தியானம் இருந்து வந்திருக்கிறது.
உடலுக்கு செய்கின்ற பயிற்சி உடலை உறுதியாக்குவது போல் மனதுக்கு செய்யும் பயிற்சி மனதை உறுதியாக்கும்
தியானம் என்பது மனதிற்கு செய்யும் பயிற்சியே ஆகும்.
மனம் ஈடுபடாத செயல் உயிர் இல்லாத உடலை போன்றது. மனம்
ஈடுபட்டு செய்யக்கூடிய எல்லா செயல்களுமே தியானம்தான்
கோவிலுக்குச் சென்று கண்களை மூடி வேண்டிய தேவைகள் பூர்த்தியாக வேண்டுதல் தியானம் அல்ல,அது பிரார்த்தனை.
பிரார்த்தனை வேறு
தியானம் வேறு,
தியானத்திற்கும், பிரார்த்தனைக்கும் சம்பந்தம் இல்லை,
ஆனால் சம்பந்தம்உண்டு.
மனம் ஈடுபடாத வேண்டுதல்களால் பயன் இல்லை, பலனும் இல்லை
.தியானத்திற்குகென்று தனியாக நேரமில்லை
எல்லா நேரங்களிலும் நாம் ஏதோ ஒரு வேலைகளை செய்து கொண்டே யிருக்கிறோம். அந்த வேலைகளில் மனம் இருந்தாலே அந்த வேலையே தியானம்
தியானத்தின் மூலம் அடையக்கூடிய பயன் என்னவெனில்
மனப்பயிற்சிஆகும்
மனப்பயிற்சின் மூலம் மனம் வலுவடையும்,
வலுவடைந்த மனம் எந்தப் பிரச்சனைகளையும் சரியாக சிந்திக்கும், பயமில்லாமல் நேருக்கு நேர் சந்திக்கும்
, மனதின் உணர்வுகளாய் இருக்கின்ற காம, குரோத,லோப, மோக, மத, மாச்சரியம் போன்ற விஷயங்களில் பலமாக மனம் நிதானத்தைக் கடைப்பிடிக்கும்.
எத்தனை பேருக்கு தன்னுடைய உணர்வுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் இருக்கிறது உணர்வுகளின் மீது ஆதிக்கம் செலுத்த உணர்வுகளை அறிந்து கொள்ளும் அறிவும், பக்குவமும் வேண்டும்
அது தியானத்தின் மூலம் கைகூடும்.அதனால் தியானம் செய்வோம் ஆற்றலை பெறுக்குவோம்
வாழ்வாங்கு வாழ்வோம்