Skip to content
தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா? ஆமாம் அது சாத்தியம்தான்.
சொற்களை பயன்படுத்தி பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை
பேசுவதில்லை. தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு
இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம்.
எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டியது
அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர்
இணைந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்றைய
சூழ்நிலையில் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம், அவற்றுடன் கொண்டிருந்த
உறவை நாம் மறுத்து வருவதுதான். தாவரங்களை வளர்ப்பவர்கள், அவற்றின் அருகில்
இருப்பவர்கள் எந்த நேரமும் அவற்றை கவனித்துக்கொண்டிருப்பதால்
அவற்றின் மொழியை அறிய முடியும். ஒரு தாவரம் என்ன செய்யும்
அல்லது செய்யாது என்ற முன் தீர்மானத்தை முதலில் ஒருவர் பெற வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் உடலையும், மனதையும் அமைதிப்படுத்தி,
அவை என்ன சொல்ல வருகின்றன என்று கவனிக்கவும், புரிந்துகொள்ளவும்
முயல வேண்டும்.கருணையோடு அவற்றை அணுகி தொடர்பை
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அறிவாற்றலுக்கும் மூளைக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை. அறிவாற்றல் என்பது ‘ ஒன்றை அறிவது ‘ .
ஓர் உயிர் அறிவாற்றலுடன் திகழ்வதற்கு மூளை தேவை இல்லை.
அறிவியல் பூர்வமாக இதை நிரூபிப்பதற்கு தரவுகள் இருக்கின்றன.
தாவரங்கள் ஒன்றொடொன்று பேசுவது மட்டுமல்லாமல், கற்பது, நினைவில்
கொள்வது, முடிவெடுப்பது போன்ற திறன்களையும் கொண்டிருக்கின்றன
என்பதற்கான தரவுகளும் உள்ளன. இவை அனைத்தும் அறிவாற்றலுடன்
சம்பந்தப்பட்டவை. முடிவெடுப்பது, கற்றல் ஆகியவற்றுக்கு விஷயங்களை
தேர்ந்தெடுக்கும் திறன் தேவைப்படுகிறது. இதுவே அறிவாற்றல் என்பதற்கான
விளக்கமாக காட்டப்படுகிறது. எனவே, தாவரங்கள் அறிவாற்றல் மிகுந்தவையே.
மனிதர்களே அறிவாற்றலில் உயர்ந்தவர்கள் என்ற கருத்து, இந்த உண்மையை
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மனிதர்களை போல் மூளையும் நியூரான்களும்
இருந்தால் அறிவாற்றல் உள்ளவர் என்று நினைக்கிறோம். ஆனால் தாவரங்கள்,
இன்னும் பிற உயிரினங்களை ஆராய்ந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில்
பார்க்கும் போது இந்தக்கூற்று முரண்படுகிறது. உயிரினங்களின் அறிவாற்றலை
பற்றி பேசும் பல்வேறு கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இது
அழைப்புவிடுக்கிறது. எனவே, தாவரங்கள், உயிரினங்களைப்
பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், மனித மூளையைப்
பற்றி ஆய்வு செய்பவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு
இதுவோர் அருமையான காலம்.
Go to Top