தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து,
இழந்துவிட்டதங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்
உயர்ந்த கருத்துக்களை இவர்களுக்குக் கொடுங்கள்.
இந்த ஒரே ஒரு உதவிதான்அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும்.
இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதுதான் நமதுகடமை.
பின்புஅவை இயற்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும்.
இப்போது மலை முகமதுவிடம் செல்லா விட்டால்
முகமதுதான் மலையிடம்செல்ல வேண்டும்.
ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால்
கல்விதான்அவனை நாடிப் போக வேண்டும்.