நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அனைத்தையும் இழந்து விட்ட பின்
நான் என்பதிலும் வெற்றி பெற்றேன் என்பதிலும்
சக்கையை தவிர வேறு என்ன இருக்கிறது.
யோசிக்க நேரமில்லை, யோசிக்க ஆசையில்லை
சரியாக சொன்னால் யோசிக்க தெரியவில்லை
வேறு எப்படி எடுத்துக்கொள்வது
உழைப்பின் உன்னதம்
சிந்தித்தலின் அழகு
அதை செயல்படுத்தலில் உள்ள நளினம்
இவையெல்லாம் இக்கால இளைய தலைமுறையினர்
அறியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டதே
அதனால் அவர்கள் வாழ்க்கையே அவர்களுக்கு அந்நியமாகிவிட்டதை
அறியாதவர்களாக ஆகிவிட்டார்களே
என்ன செய்வது
அறிந்தவர்கள் வருத்தப்படதான் முடியும்
வேறு என்ன சொல்ல, வேறு என்ன செய்ய?