தமிழகத்திற்கு கொடுமையான காலம் என்று ஒன்றிருந்தது.
அது வரியும் பஞ்சமும் ஒன்று சேர்ந்து மக்களை வாட்டிய காலம்.
அப்போதெல்லாம் வரி வசூல் செய்ய அதிகாரிகள் இருந்தனர்
அவர்கள் வீடுகளுக்கு சென்று வரி கேட்டால் கொடுக்காதவர்களுக்கு அவர்களே
தண்டனையும் தரக்கூடிய அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர்
தண்டனைக்குள்ளானவர்கள் அதிகம்பேர். அந்த தண்டனையின் பெயர் ‘ அண்ணாந்தாள்’. அப்படியென்றால்
வரி கட்டாதவர்களை கைகளையும், கால்களையும் பின்னால் சேர்த்து கட்டி
கொளுத்தும் வெயிலில் நிறுத்தி விட்டு, சவுக்கால் அடியும் தருவார்கள்.
இது பற்றி அரசாங்கத்துக்கு புகார்கள் கொடுத்துள்ளனர்.