தத்துவம் எது என்று வினா வந்தால்
சிறிதும் யோசிக்காமல் விடையை சொல்லிவிடலாம்
மனித வாழ்க்கையென்று
ஆம் வேறு எது பெரிய தத்துவமாக இருக்கமுடியும்.
எத்தனை தத்துவங்கள் இருந்தாலும்
மனித வாழ்க்கைக்கு வேண்டிதானே தத்துவம்.
தத்துவம் நிலைபெறுவது தர்க்கத்தினால்
மனித வாழ்க்கை எனும் தத்துவத்திற்கு,
மனித வாழ்க்கையின் ஒட்டமே தர்க்கம்.
ஒவ்வொரு மனிதனின் காலமும்,
முன்னேற்றமும், வீழ்ச்சியும்,
சாதக, பாதகங்களுமே
மிக சிறந்த தர்க்கங்கள்.