ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகள்.
1. ஜென்ம லக்கின ஸ்புடத்தை 5 ஆல் பெருக்கி வரும் தொகையுடன்
ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்ட வருகிற மொத்த ஸ்புடம் ஜீவன் அல்லது பிராணன் என்றும்
2. ஜெனன காலத்தில் சந்திரனுடைய ஸ்புடத்தை 8 ஆல் பெருக்கி
வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்டி வருகின்ற மொத்த ஸ்புடம் தேகம் என்றம்
3. ஜெனன காலத்தில் மாந்தியினுடைய ஸ்புடத்தை 7 ஆல் பெருக்கி
வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் சூரியனுடைய ஸ்புடத்தை கூட்டி வருகின்ற மொத்த ஸ்புடம் மிருத்தியு என்றும்
4. ஜீவஸ்புடத்தையும், தேகஸ்புடத்தையும் கூட்டி வருகின்ற மொத்த
தொகை மிருத்தியூ ஸ்புடத்தை விட அதிகமாக இருப்பின் பூர்ண ஆயுள் ஏற்படும். குறைந்தால் அற்ப ஆயுள்
5. ஜீவன் – தேகம் – மிருத்தியு இந்த மூன்று ஸ்புடங்களையும்
ஒன்றாக கூட்டி வருகின்ற மொத்த ஸ்புட தொகைக்கு உரிய ராசியில் சனி கோச்சாரத்தில வரும்போது தன நாசம் ஏற்படும். இந்த ராசிக்கு 1, 5, 9 – ல், அல்லது ஸ்புட தொகைக்குரிய நவாம்ச ராசியில் சனி வரும்போது கண்டம் மாரகம் ஏற்படும்
6. சூரியனுடைய அஷ்டவர்கத்தில் சூரியன் இருக்கும் ராசியில்
எத்தனை பரல் உண்டோ அத்தனையாவது கெற்பமாக ஜாதகர்
ஜெனிப்பர். சூரியன் பலத்தை பொருத்து ஏற்றம் இறக்கம் செய்யவும்.
7. ஜென்ம லக்கினத்திற்கு 1, 4, 7, 10 -ல் புதன் இருந்து சூரியனுக்கும்
சந்திரனுக்கும் 1, 4, 7, 10 – ல் செவ்வாய் இருப்பின் அவதாரயோகம் நல்ல நிலையில் வாழ்வர்.
8. சுக்கிரன் கோபுரம்சத்திலும், குரு பர்வதாம்சத்திலும் இருந்து
சந்திரனும், பர்வதாம்சத்திலிருந்தாலும், ஹரிஹர பிரம்மயோகம், இது எவ்வித குறைவும் இன்றி ஆரோக்கியத்துடன் தர்மவான் என பெயர் கிட்டும்.
9. மாளவியாயோகம், குரு, சனி சேர்க்கை இருப்பினும்,பார்வை
இருப்பினும், சுக்கிரனுடன் கேது சேர்ந்தாலும் மாளவியாயோகம் கிட்டாது.
10. ஜென்ம நட்சத்திராதிபதி தன் உச்ச ராசி அம்சத்தில் இருப்பின்
லட்சுமி யோகம்.
11. லக்கினத்தில் குரு, சக்கிரன் சேர்க்கை 3 – ல் செவ்வாய் – சனி
சேர்க்கை இருப்பின் லட்சுமி யோகம். 25 வயதுக்கு மேல் பாக்கியமும் 30 வயதுக்குமேல் அதிபாக்கிய யோகமும் ஏற்படும்.
12. ஸ்திர ராசியில் பிறந்தவர்களுக்கு 2 – ல் பாவர் இருந்து
சந்திரனுக்கு 8, 12 – ல் பாவர் இருப்பின் யோக பங்கம் ஏற்படும். துக்கம்
ஏற்படும்.
13. எந்தக் கிரகம் நீச்சஸ்தானத்தில் உள்ளதோ அந்த ஸ்தானாதி –
யாவது, அல்லது அந்த நீச்சஸ்தானத்தில் உச்சமடையும் கிரகமாவது
சந்திரனுக்க 1, 4, 7, 10 – ல் இருப்பின் நீச்ச பங்கம் ஏற்படும்.