ஜோதிடர் அமரும் திசை
தெற்கு, மேற்கு பார்த்து அமருவது நல்லது.
ஜோதிடம் கேட்பவர் :- கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பார்த்து அமருவது நல்லது.
ஜோதிடம் கேட்பவர் கிழக்கு முகமாய் இருந்தால் அனுகூல பலன்கள் ஏற்படும்.
மேற்கு முகமாய் இருப்பது கூடாது.
வடக்கு, தெற்கு முகமாய் இருந்தால் நல்லது நடக்கும்.
தென்மேற்கு முகமாய் இருந்தால் காரியங்கள் நடக்க கால தாமதமாகும்.
வடகிழக்கு முகமாய் இருந்தால் பல தடைகள் ஏற்படும்.
வடமேற்கு தென்கிழக்கு முகமாய் இருந்தால் தோல்வி, ஏமாற்றம், தடுமாற்றம் ஏற்படும்.
பிருகத் பராசர ஹோராவில்
உலக சிருஷ்டி காலத்தில் எல்லாம் வல்ல இறைவனருளிய வேதத்தில் கூறப்பெற்றுள்ள
கர்மங்களைச் செய்வதற்குரிய கால நிர்ணயத்தை அறியும் பொருட்டு
இச்சோதிட சாஸ்திரத்தை கர்கமுனிவருக்கு பிரம்ம தேவன் உபதேசித்தார் என்றும்
இந்த சாஸ்திரத்தை சிரத்தையோடும் விநயத்தோடும் குருமுகமாக கேட்டுணர்ந்த புத்திமான்
குரு ஆசீர்வாதத்தினாலும் சாஸ்திர ஞானத்தினாலும்
சர்வ பாபங்களினின்றும் நீங்கிமுக்தானாவான் என்கிறது.