ஜானுசீராசனம்
நேராக உட்கார்ந்து கொண்டு கால்களை அகலமாக முடிந்த அளவு விரித்து,
பின் வலது காலை மடக்கி குதிகால் ஆசனவாயில் படும்படி வைக்கவேண்டும்.
இரு கைகளையும் குவித்த நிலையில் மெதுவாகக் குனிந்து
இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும்.
முகம், இடது கால் மூட்டைத் தொட வேண்டும்.
பின் வலதுகாலை நீட்டி இடதுகாலை மடக்கி முன்போல் செய்ய வேண்டும்.
ஆசன நிலையில் 5 முதல் 15 வினாடி இருந்தால் போதுமானது.
ஒவ்வொரு காலையும் 3 முறை மடக்கிச் செய்தால் போதுமானது.
பலன்கள் —
விலாப்புறம் பலப்படும்.
விந்து கட்டிப்படும்.
அஜீரணம், வாயுத் தொந்தரவு நீங்கும்.
உடல் நல்ல இணக்கம் கொடுக்கும்.
வயிற்றுப் பகுதியில் அதிகமான ரத்த ஒட்டம் ஏற்படும்.
நடு உடல் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறுகுடல் இளக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்.
வயிற்றுவலி தீரும்,
முதுகு, இடுப்புவலி நீங்கும்.
அடிவயிறு இழுக்கப் பெற்று தொந்தி கரையும்.