ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதற்குடைய சூரியன் நீச்சம் அடைந்திருந்தால் பிதுர் தோஷம் உண்டு. இப்படி அமைய லக்னம் தனுசு
ஆக அமைந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு.
மேஷ லக்னத்திற்கு நாலுக்குடைய சந்திரன் விருச்சிகத்தில் நீச்சமடைந்து எட்டில் இருக்கும் போது மாதுர் தோஷம் உண்டு.
சிம்ம லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய செவ்வாய் கடக ராசியில் 28 பாகையில் அமைந்திருந்தால் சகோதர வர்க்கத்தால்
தோஷமும் கிராம தேவதைகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
ரிஷப லக்னத்திற்கு ஐந்துக்குடைய புதன் மீனத்தில் நீச்சம் பெற்று 15 பாகையில் அமைந்திருந்தால் அந்த ஜாதகருக்கு அம்மான்
வகை சாப தோஷங்கள் உண்டு அது மட்டுமல்லாது தேவர்கள் கந்தவர்கள் போன்றோர்களின் சாபமும் உண்டு.
கடக லக்னத்திற்கு ஒன்பதற்குடைய குரு நீச்சமடைந்து 5 பாகையில் இருந்தால் புத்திர தோஷமுண்டு. சாது சன்னியாசிகளின்
சாபம் உண்டு
.
விருச்சிக லக்னத்திற்கு ஏழுக்குடைய சுக்கிரன் கன்னியில் நீச்சமடையும் போது 27 பாகையில் அமைந்திருந்தால் பெண்களின்
தோஷமுண்டு. தெய்வ சாபமும் உண்டு.
மகர லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் ராகு,கேதுக்களிலிருந்தால் சர்ப்ப தோஷம் உண்டு. இது எல்லா லக்னத்திற்கும்
பொருந்தும். குருவின் பார்வை பெற்றிருந்தால் பரிகாரம் உண்டு. தோஷ நிவர்த்திக்கு வாய்ப்புண்டாகும்.
எந்த ஜாதகத்திற்கும் ஐந்தாம்மாதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்திருந்தாலோ ஐந்தாம் இடத்தில் சனி, ராகு, கேது, மாந்தி
போன்ற கிரகங்கள் அமைந்திருந்தாலோ குல தெய்வ சாபமும், குருவின் சாபமும், புத்திர தோஷமும் உண்டு.
எந்த ஒரு ஜாதகத்திலும் ஏழாம்மாதி ஐந்தில் இருந்திருந்தால் மனைவியால் யோகம். குல தெய்வத்தினுடைய அனுக்கிரகம்
திருமணத்திற்குப் பின் நல்லபடியாய் கிட்டும்.
எந்த ஜாகத்திற்கும் மூன்றில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் ராகு, கேதுக்களுடன் இணைந்திருந்தால் சகோதர தோஷம்
உண்டு.
எந்த ஒரு ஸ்ரீ ஜாதகத்திலும் சனி, செவ்வாய், ராகு எட்டாம் வீட்டில் அமைந்திருந்தாலும் அந்த எட்டுக்குடையவன்
நீச்சமடைந்திருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டு.
எந்த ஜாதகத்திற்கும் பன்னிரெண்டாமாதி 6, 8 -ல் மறைந்து சனி செவ்வாய், ராகு, கேதுவுடன் இணைந்திருந்தால் சயன தோஷம்
உண்டு.