சோட்டானிக்கரை பகவதி அம்மன்
ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து
மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.
காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்;
உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்;
மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள்.
இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள்
நினைத்தது நிறைவேறும்.