சுவர்ண கால பைரவர், செல்வத்திற்கு அதிபதியான பைரவரை
சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள்.
இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக
அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர்
என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.