செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றவர்கள், பாதுகாப்பு படையில், காவல் துறையில் பணியாற்றுவார்கள்.
செவ்வாய் சுக்கிரன் சனி இவர்களுக்குள் ஏதாவது ஒரு தொடர்பு ஜாதகத்தில் இருப்பின்
அந்த ஜாதகர் மறைக்கப்பட்ட பொருளை அறிவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பர்.
செவ்வாய்க்கு மகரத்தில் உச்சநிலை காரணமாக நிலம், மனை, வீடு வாகனம் பொறியியல் துறைகள் மூலம் நன்மைகள் ஏற்படும்.
செவ்வாய்க்கு கேந்திர, திரிகோணங்களில் குரு, புதன், ராகு நின்றால் யோகமேற்படும்.
செவ்வாய் நீசம்பெற்று பலமுற்று பாபகிரகங்களுடன் சேர்ந்து 12ல் இருப்பின் இடது கண் பழுதாகும்.