சூரியன், புதன் சேர்க்கை ஜல ராசியான கடகம், விருச்சிகம், மீனமாகில் ( 4, 8, 12ல் ) இருப்பின்
கெமிகல், எலக்ட்ரிகல், இன்ஜினீயரிங் துறையில் கல்வி பயின்றால் நல்லது.
சூரியன், புதன் அக்னி ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு வீடுகளில் 1, 5, 9 இருந்தால்
மெகானிகல், இன்டஸ்டிரியல் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர்.
சூரியன், புதன் சேர்க்கை பூமி ராசியான ரிஷபம், கன்னி, மகரம் வீடுகளில் 2, 6, 10ல் இருந்தால்
சிவில் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர்,
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் சேர்க்கை நல்ல எழுத்தாற்றலை தருகிறது.