சூரியன் சிம்மத்திலிருந்து சிம்ம நவாம்சத்திலேயே இருக்கப்பெற்றால் துணிவுள்ளவராகவும்,
கீர்த்திமானாகவும், செல்வச்சீமானாகவும் விளங்குவார்.
சூரியனும், சந்திரனும் 3ல் ஒன்று கூடி இருந்தால் சகோதர, சகோதரிகளால் அனுகூலம் பெற வாய்ப்பிராது.
சூரியன் மகர ராசியில் இருக்கப்பெற்றால் நிரந்தரமான தொழில் அமையாது, வாழ்க்கையில் சந்தோஷம் இராது. மனதில் உறுதி இராது.
1ல் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தாரதோஷத்தை உண்டாக்கும். பெண்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.
சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஒரு ஜாதகத்துக்கு அதேபோல் சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஜாதகத்தை சேர்த்துக் கொண்டால் இல்லறவாழ்வு கெடுவதில்லை.
சூரியன் 8ம் வீட்டில் இருந்தால் கண் பார்வை பழுதுபடும். அதனால் படிப்பு பாதிக்கப்படும்.