சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படலாம்.
சூரியன் புதனுடன் மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்தால் ஞானியாகவும், தலைவராகவும் திகழ்வார்.
நான்கு கிரகங்கள் ஒரு ராசியில் நிற்க,
அதில் ஒரு கிரகம் உச்சம் அடைந்தால் சிறந்த ஞானியாக திகழ்வார்.
சூரியன், செவ்வாய் சேர்க்கை 10 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் அரசியலில் கொடிகட்டி பறப்பார்.
சூரியனுக்கு 10ல் செவ்வாய் இருந்தால் மதுபானம் அருந்துவதிலும், மாதர் சுகத்தில் ஆர்வம் கொள்வார்.
சூரியனுக்கு 10ல் குரு இருந்தால் அரச மரியாதை அடைவர்.
சூரியனும், சந்திரனும் எந்த இடத்தில் சேர்ந்தாலும் அமாவாசி யோகம்,
சூரியனுக்கு 10ல் சுக்கிரன் உச்சம், ஆட்சியாக இருந்தால் ராஜமரியாதை கிடைக்கும்.
சூரியன் சிம்மத்திலும், குரு தனுசுவிலும், மேஷத்தில் செவ்வாயும் இருக்க பிறந்தவர்கள்
மாபெரும் சாதனைசெய்து பேரும், புகழும் பெற்று விளங்குவர்.
சூரியன் 10ம் வீட்டோடு தொடர்பு கொண்டால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கலாம்.