ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று
சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது.
இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா
அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது.
இது கர்நாடக மாநிலம்,
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து
10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.
கி.பி.1196-ம் ஆண்டு
ஒய்சாலா மன்னர் அமித்தையாவால்
அழகிய சிற்பக்கலையுடன்
இக்கோவில் கட்டப்பட்டது.