உணவுண்ட ஆறேழு மணி நேரத்திற்குப் பிறகே இவை செய்ய வேண்டும்.
உண்டவுடன் செய்தால் ஜீரணக்கருவிகள் கெடும்.
பயிற்சியும் சரியாக வராது.
நெளலியை நின்றும் செய்யலாம்
உட்கார்ந்த நிலையிலும் செய்யலாம்
குதிகளைத் தூக்கி அவைமேல் உட்கார்ந்து
கைகளைத் தொடைகளுக்குள் அடக்கமாய்ப் பூமியிலூன்றி,
தலைநிமிர்ந்து நெளலி செய்யப் பழக வேண்டும்.
இந்த சாதனையில் அரை நிமிடம் வரை நிற்கப் பழகவும்.
