ஆனால் வயிற்றுச்சுவர் ( சதைகள் ) பலவீனமடைந்தால் இந்நிலை தவறுகிறது.
பூமி சக்தி கருவிகளையெல்லாம் கீழே இழுக்கின்றன.
வயிற்று இறுக்கம் ( INTRA ABDOMINAL PRESSURE ) குறைகிறது.
வயிற்றுச் சுவர் ( சதைகள் ) பூமி சக்தியைத் தடுப்பதுமின்றி, பெருங்குடலை வேலைக்குத் தூண்டுகிறது.
இச்சதைகள் இளகவே மேற்கூறிய இறுக்கம் குறைகிறது.
பெருங்குடலின் மேல் தூண்டுதலும் பலவீனப்படுகிறது.
இரைப்பையும், குடல்களும் உப்புகின்றன.
