வயிற்றுக் குழியில் குடல், இரைப்பை, லிவர் என்று பல கருவிகள் அமைந்திருக்கின்றனவென்றும்
அவை ஒன்றுக்கொன்று அழுத்திக் கொள்ளுகின்றனவென்றும், அறிந்தோம்.
இந்த இறுக்கத்தை மேலிருந்து டையாப்ரமும்,
சுற்றிலுமிருந்து வயிற்று முன்பின் பக்கச் சதைகளும் அதிகமாக்கி நிறுத்துகின்றன என்பதும் தெரிந்த விஷயம்
இந்த இறுக்கம் சிலர் வயிற்றில் ஒரு சதர அங்குலத்திற்குப் பத்து பவுண்டு ( ராத்தல் ) என்று கணக்கிடுகிறார்கள்.
சாதாரணமாயுள்ள மனிதர்களுக்கு இந்த இறுக்கம் உள்கருவிகளைக் கீழே இழுக்கும்
பூமி ஆதர்ஷன சக்தியைக் தடுக்கப் போதும்.
இக்காலத்தில் குடல்கள் வயிற்றில் மிதக்கின்றன என்றும் சொல்லலாம்.
‘மெஸன்ட்ரீஸ்’ சதைகளின் மேல் இழுப்பு இருப்பதில்லை.
