ஆரோக்கிய காலங்களில் இச்சலனங்கள் நடக்கின்றன.
நோயில் இவைகள் தடைபெறவே உள்ளிருக்கும் சாமான்கள் அழுகி, விஷங்களைக் கக்கி, அபாயத்திற்கிடமாகின்றன.
சிறுகுடல் சீகம் மூடி( LLEO CAECAL VALVE ) யிலிருந்து ரெக்டத்திற்குவர சுமார் ஆறு மணி நேரம் பிடிக்கும்.
இங்கு வந்த பிறகு, சில மணி நேரம் தங்கியே ரெக்டத்திற்குள் செல்லுகின்றது.
இங்கு அதிகச் சரக்கு சேரவே, இங்குள்ள காலன் மடிப்பு உயர்ந்து
ரெக்டத்திற்குள் தள்ளி, மலத்தை வெளியேற்றுகிறது
இந்த வேலைக்கு டயாப்ரமும் வயிற்றுச் சதைகளும்
தேவையான இறுக்கத்தால் ஒத்துழைக்கின்றன.