மனிதனும் ஒரு பெரிய இயந்திரமே இவன் வாயில் ஹல்வா, தோசை, வடை எல்லாம் கொட்டப்படுகின்றன.
ஆனால் வெளியே வரும் பொருள் வயல்காட்டுக்குத்தான் உபயோகம்.
பல எழுத்துக்களை கொண்ட வாசனைப் பொருள்களெல்லாம்
ஓர் எழுத்துக் கொண்ட சாமானாக ஒதுக்கப்படுமுன்
வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், முதலியவைகளைக் கடந்தே வெளிவருகின்றன.
இதற்குள் சுமார் 30 அடி தூரம் இச்சாமான்கள் கடந்து செல்கின்றன.