சில குழந்தைகள் வெல்லத்தைக் கொடுத்தால்தான் அழுகையை நிறுத்தும்,
ஹீ!ஹீ “ என்று அழுது கொண்டே “எனிமாவைக் கொண்டா” என்று பெருங்குடல் சதியடிக்கும்
பெண்டாட்டியைக் கைவிடலாம். குழந்தைகளை கைவிடலாம்.
வீடு தனத்தையும் மறக்கலாம். காபி சுகந்த மூக்குத் தூளைக்கூட ஒருவாறு புறக்கணிக்கலாம்.
ஆனால் எனிமா டின்னோபிரியா நண்பனாய் ஒட்டிக் கொள்ளும்
எந்தப் பாச்சாவும் இதனிடம் பலிக்காது.
இதற்கு அடிமையானவர்களைக் கண்டு யோக சாஸ்திரம் அனுதாபம் காட்டுகிறது!.