எவ்வளவு சீக்கிரம் நோய் தாக்கியவுடன் நோயாளி யோக சிகிச்சைக்குத் திரும்புகிறாரோ,
அவ்வளவு சீக்கிரமாகக் குணமடைவார்.
தற்காலத்தில் தாண்டவமாடும் மேல் நாட்டு அல்லோபதி வைத்திய நிபுணர்கள்,
கீழ்க் காணும் நோய்களை ஒழிக்க மருந்து, சிகிச்சை கிடையாதென்று முறையிட்டு விட்டனர்.
இவைகளில் சிலவற்றுக்குத் தற்போதைய பயன், சிகிச்சை மட்டும் விதிக்கின்றார்கள்.
இன்னும் சிலர்
உடல், இயற்கை, உணவு ஒழுக்கத்தால் குணமடையலாம் என்று கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட நோய்களின் பட்டியல் பெருகிக் கொண்டே போகின்றது.
நூதனமான புது நோய்கள் கிளம்பி சேர்க்கப் படுகின்றன.