பொய்யான இன்பத்தை வழக்கமாக கொண்டிருந்தால் நோய்தான் வரும். இன்பம் வராது.
சுகம் சாக, அதில் பிணி பிறக்கின்றது. சுகம் மறைய நோய் வளர்ந்து, அதிகமாகிறது,
ஆயுளும் குறைகின்றது எவ்வாறு?
உண்ணும் கணச் சுகத்தை எம்முறையில் அனுபவிக்கிறோம்?
வயிறு நிறைய சாப்பிடுவதால், அளவுக்கதிமாக சாப்பிடுவதால் பலமிழந்து நூறு வயது இருக்க வேண்டிய
இரைப்பை கெட்டு, சில வருஷங்களில் உயிரற்ற தோல்பை போல் மாறுகிறது.
இயற்கை விரோதமான மிளகாய், காபி, கள், உயிரற்ற தீட்டிய கஞ்சி வடித்த உணவுகளை நிரப்புவதால்
இரைப்பைச் சதைகள் புண்பட்டு, நரம்பு சக்தி இழந்து ஜீரண ரசங்கள் குறைய,
நரகவதை ( உடல் வேதனை ) ஏற்படுகிறது.
I understood the difference between love and peace.