ஹோட்டல்கள் கணக்கின்றி ஊரெல்லாம் பரவிவிட்டன.
இவைகள் பணம் திரட்ட நடத்தப்படுகின்றன.
ஜனங்களுக்குச் சேவை செய்ய அல்ல.
லாபமும், சேவையும் கலந்து நடத்தப்படுவதில்லை.
இதில் உணவு தயாரிக்கும் முறைகள் சேர்க்கப்படும் பொருள்கள்,
நோய் பரவக் காரணமாகின்றன.
பட்டினங்கள் பெருக இயந்திர யுகம் பரவ, வீட்டிலுண்பது குறைய,
ஹோட்டல்கள் எங்கு பார்த்தாலும், கிளம்ப,காரணமாகிவிட்டது
இவைகளில் உண்ண வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்பட
நோயிலிருந்து ஒருவன் தன்னை தடுத்துக் கொள்வது
சிரமமோங்கிய, நுட்பமான செயலாகிவிட்டது.