மலப்போக்கு உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம்.
விலங்குகளுக்கு இது ஏற்பட்டவுடன் மலத்தைக் கழித்துவிடுகின்றன.
வைத்தியரும், வைத்தியசாலைகளும் இன்றி,
மனிதனைக் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றன.
இதிலும் மனிதனின் போக்கு தொத்துவியாதி,
அசுத்த ஆபாசங்களுக்கு இடம் தரும்.
சுய இச்சையாய் காட்டில் திரியும் விலங்குகள்,
இன்றும் ஆரோக்கியமாக அமோகமாகப் பெருகி வாழ்கின்றன.
விலங்கின் சுதந்திரம் மனிதனுக்கில்லை.
வசதி இருந்தாலும், வம்பு பொழுதுபோக்கு,
நாகரீகத் திட்டங்களை உத்தேசித்து
இயற்கையின் மிக முக்கியமான இந்த உணர்ச்சியை ஒதுக்கி வைக்கிறார்கள்.