சாந்தி யோகம் என்ற என்நூலைப் படித்தால், கருத்து நன்கு விளங்கும்,
ருத்ரம், சமகம் முதலிய வேதாந்த மந்திரங்கள்,
சாந்தி பஞ்சகம், அஷ்டாங்க யோகம் என்ற எல்லா மன சிகிச்சைகளும்,
நாம் இவைகளில் பெற்றுள்ள தேர்ச்சியையும்
இவைகளின் அவசியத்தையும் புலப்படுத்துகின்றன.
நம் மேதாவிகள்
உடல்பிணி, மனப்பிணி என்பவைக்கு மேலாக பவப்பிணி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
சுகம் சாந்தியாக நிலைக்கும். தன்மைக்கு விரோதமான
அவித்தை பிறப்பிறப்புப் பிணியைப் போக்கும் சிகிச்சையை யோகம் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
எனவே உடல் பிணி மனப்பிணி, மனப்பிணி, உடல்பிணி, பவப்பிணி இம் மூன்றையும் போக்கக்கூடியது யோகம் என்று விளக்கும்
சுலோகங்களில் இரண்டை மட்டும் கவனித்து மேல் செல்வோம்.