இன்னும் இரண்டு சுலோகங்கள் இந்த விசாரணையில் கலக்க வேண்டி யிருக்கிறது.
உடல்பிணி மட்டும் கவனித்தோம்.
உடல்பிணி, மனப்பிணியை உண்டாக்கும்.
மனப்பிணி, உடல்பிணியை உண்டாக்கும்.
தற்காலப் பிணி, விஞ்ஞான மேதாவிகள் மேல்நாட்டு ஆராய்ச்சி சிகரத்திலிருந்து முறையிடுகின்றனர்.
மன சிகிச்சை, அதாவது, சைகியாட்ரி ( PSYCHIATRY OR PSYCHOANALYSIS ) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இவர் கூற்றைக் கேட்டு,
மருந்துக் கடலில் மிதக்கும் நம் மக்களுக்கு, இதைப் பற்றி ஏதோ உளறவும், விசாரிக்கவும், சிறிது ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த மன சிகிச்சை யோகத்தின் ஒரு சிறிய பாகம்.
இவ்விஷயத்தில் நம் யோகம்
மனமெட்டா நாட்களுக்கு முன்பே அடைந்திருக்கும் தேர்ச்சி,
மற்ற எந்த நாட்டிலும் எந்த காலத்திலும் அடையப் போவதில்லை.
அடைய இடமுமில்லை.