பழக்க வழக்கங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
இந்த சுத்தம் நோய் வராமல் தடுக்க மெத்த அவசியமாகும்.
இதற்கு விரோதமானவை குடி போதை, பொடி, சுருட்டு,
புகையிலை பழக்கங்கள், போதையில் கஞ்சா, அபின்
பிரதானம் பெற்றவை மூக்கில் தூளேற்றுவது,
புகையிலையை வாயில் போடுவது எல்லாம் நோயை
அதிக சீக்கிரத்தில் வரவழைத்துக் கொள்ளும்.
பிணி தடுத்தலுக்கு இப்பழக்கங்கள் எதுவும் உதவாது.