மோட்டார் கார் உழைப்பால் கேடடைந்து கொண்டே போகும்.
தனக்குத் தானே பொருளை உண்டு, சரி செய்து கொள்ளச் சக்தியற்றது.
தன்னை வளர்த்துக் கொள்ளவும் சூழ்ச்சி கொண்டதல்ல,
மானிட இயந்திரமான உடலோ கிடைக்கும். பொருளால் வளரவும்,
தன்னைச் சரி செய்து கொள்ளவும் சக்தி பெற்றது.
எண்ணற்ற வித்தியாசங்களில் இது ஒன்றே ஒன்று.
எனவே அளிக்கப்படும் உணவுப் பொருளானது, உஷ்ணம், சக்தி கொடுப்பதுமின்றி
உடலை வயதுக்கு தகுந்தவாறு வளரச் செய்யவும்,
வாழ்வில் செத்த அணுக்களுக்குப் பதில் புது அணுக்களை உண்டாக்கவும்
கேடுண்டால் திருத்திக் கொள்ளவும் தேவையாகிறது.