ஆண்டவன் படைத்த இயந்திரமான உடலும், சீர்கெட்ட உணவை, குறைவுபட்ட உணவைப் பெற்றால்,
சரியாக வேலை செய்யாமல் சக்தி குன்றி, நோய் வந்து, வேலை நிறுத்தம் செய்யும்.
இந்த உதாரணம் உணவின் அவசியத்தையும் அது சீரோங்கி இருக்க வேண்டியதையும் விளக்குகிறது.
மோட்டார் கார், மனிதன் உண்டாக்கிய இயந்திரம், மானிட உடலோ, ஆண்டவன், ஜீவனுக்கு சுகித்து வாழ்ந்து
அகண்ட நித்திய சுகமான தன்னுடன் முடிவில் கலக்க, கொடுக்கப்பட்ட ஒப்பற்ற இயந்திரமாகும்.
இவ்விரண்டுக்கும், சக்தி சூழ்ச்சி உழைப்புகளில், சொல்ல முடியாத வித்தியாசங்கள் உண்டு.
சூரியனும் ஒரு நட்சத்திரமும் ஒளியிலும், சூட்டிலும் நமக்கு எவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றன
இதைப் போல் கோடிக்கணக்கான அதிக வித்தியாசம் இவ்விரு இயந்திரங்களுக்கும் உண்டு.
மானிட உடல் சூரியனைப் போல் உன்னதமானது
மனிதன் உண்டாக்கிய எந்த அபூர்வ இயந்திரமானாலும்
அது நட்சத்திரத்தைக் காட்டிலும் பல கோடி மடங்கு சிறுமை கொண்டது.