ஆண்டவன் படைத்த இயந்திரமே மானிடஉடல்.
இந்த இயந்திரம் சுழல, வேலை செய்ய இதற்குப் பெட்ரோல் எண்ணெய் வேண்டும்.
இந்த பெட்ரோல் எண்ணெய் தான் நாம் தேடி உட்கொள்ளும் உணவென்பது.
உழைப்பின் குணம், தீவிரங்களுக்குத் தக்கபடி உணவின் விதம். பிரமாணம் மாறுபாட்டைகிறது.
எப்படி மோட்டார் காரில், பெட்ரோல் எண்ணெய் ஆவியாக மாறி தீப்பொறியால் வெடித்து,
சூட்டு சக்தியைக் கிளப்பி உழைக்கிறதோ, அதே மாதிரி மானிட இயந்திரமான உடலில் உட்கொள்ளும் உணவு
சூட்டுச் சக்தியாக மாறி, உயிரோங்க உழைக்கச் செய்கிறது.
பெட்ரோல் எண்ணெய் தாறுமாறாகக் கலந்தோ, அழுக்கடைந்தோ இருந்தால்
மோட்டார் கார் சரியாக வேலை செய்யாது
சீக்கிரம் கெடும். வேலை நிறுத்தமும் செய்யும்.