சாதாரண வைத்தியம் சுற்று வழியில் பிராணாவை சமாதானம் செய்ய முயலுகின்றது.
நேர் வழியில் பிராணாவைச் சரி செய்வதே யோக சிகிச்சை.
இந்த விளக்கங்களிலிருந்து பிராணாவை சமாதான நிலையில் வைத்திருப்பதே பிணி தடுத்தலுக்கு வழி
என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
பிராணா சூக்ஷமமாயிற்றே! நாம் அதை எவ்வாறு பார்த்து அறிந்து சரி செய்து கொள்ள முடியும்?
குழம்பு கூட்டானால் குறைந்து சேர்த்து சரி செய்து கொள்ளலாம். கைகளுக்கு எட்டாத, புலன்களுக்கு
விளங்காததாயிற்றே எனலாம்.
இதைப்பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.
பிராணாவைப் பற்றக்கூடிய, பரப்பக்கூடிய, சமாதானம் செய்யக்கூடிய கருவிகள் அமைப்புகள், சக்திகள்
ஒவ்வொரு உடலிலும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றன.
இவைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் செய்தால் செய்து நின்றால்,
பிராணனில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டது, நாமறியாமலேயே இவைகள் சரி செய்துவிடும்.