பிணியை அறிந்தபின் பிணியைப் போக்க பிராண சக்தி அளிக்கப் படுகின்றது.
வைத்தியர் மருந்து மூலமாக இதை அளிக்க முயலுகிறார்.
அந்தப் பிணியைப் போக்க, தேவையான பிராணாவை
எந்தப் பொருளிடமிருந்து கேடுண்ட கருவி, பாகம் எடுத்துக் கொள்ளும் என்று தேர்ந்தெடுத்தலே,
தகுதியான மருந்தைக் கண்டுபிடித்தல்,
பிராணாவைச் சரிசெய்ய, மருந்துடன் சிலபுத்தியுள்ள வைத்தியங்கள் உணவு ஒழுக்கத்தையும்
கையாளுகிறார்கள். ரண சிகிச்சை ஏற்பட்டிருக்கிறது. காக்கத் தெரியாமல், சரி செய்யத் தெரியாமல் போய்
விட்டால், கேடுண்ட பாகத்தை அறுத்தெறிந்துவிடுகிறார்கள்.
ரண சிகிச்சை எல்லாம் விதியறியாது. கதியில்லா விழிக்கும் சிகிச்சை ( REMEDY OF DESPAIR ) யாகிறது.