எல்லா பாகமும் விஷஸ்னானம் பெறவே வீரன், இருளன்,
காட்டேரியைக் போன்ற பலவித வியாதிகள் ஒழியாக்குடி புகுந்து கொட்ட மடிக்கின்றன.
சீகத்தில் உண்டாகும் விஷய்ஙகள் சிறுகுடலுக்குள்ளும் உறிச்சென்று,
அதன் சதைச்சுவர்கள் மூலம் கிரகிக்கப்பட்டு, குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்து விடுகின்றன.
இந்தச் சீகம் இவ்வளவு மோசமானது! இப்பெருங்குடலின் மற்ற பாகங்கள் சாதுவல்ல.
ஆனால் இதைப் போல் அபாயத்தைக் கொடுக்காது.
அங்க மலம் தங்கக் கூடுமாகையால், கெடுதி உண்டு.
வெட்டி விட்டால் –
இந்த சீகத்தையே தொலைத்து விட்டால் என்ன என்ற யோசனை வரக் கூடும்.
இது டாக்டர் அர்ப்பத்நாட்லேன் அவர்களுக்கு வந்து, பெருங் குடலையே வெட்டி எறிந்துவிட்டு
வாழச் சூழ்ச்சியை அவர் செய்திருக் கிறாராம்!
எனிமாவுக்கு அடிமையாகலாமா?