வெளியில் பார்த்தவுடன் வாந்தி எடுக்கும் மகான்.
கொஞ்சம் தன் உடலை ஞாபகம் செய்து கொள்ள வேண்டும்.
மலம் சேர்க்கணக்காய் இவர் குடலில் தங்கி நிற்கும்.
பலநாள் பண்டமாய் கேட்பாரற்று, நாறிக் கிடக்கும்.
பல வருடங்களாக வெளிப் போக்கின்றி வரண்டுகூட இருக்க மென வைத்திய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதை வயிற்றில் வைத்துக் கொண்டு, வாசனையை மேல் பூசி பகட்டு அங்கிகளால் மூடி,
நாகரீக மனிதரென்று பெருமையில் உலாவுகிறார்கள் பலர்.
உள் உடல் சுத்த மில்லாத வாழ்க்கை நாகரீகமுற்றதாகுமா?